பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள்

செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்

  • பசுங்சோகை புள்ளிகள், நீள் வடிவில் (அ) ஒழுங்கற்ற வடிவில், சாம்பல் கலந்த பழுப்பு நிறமாக மாறும். ஸ்போர் வித்துக்கள் புள்ளியின் நடுவில் காணப்படும்
  • நோய் தீவிரமடையும் போது, இலைகள் முதிர்வதற்குமுன் உதிர்ந்துவிடும். இதனால், பழங்களின் விளைச்சல் குறையும்
நோயற்ற இலைகள்  
நோயுள்ள இலைகள

கட்டுப்பாடு

  • பந்த் சாம்ராட் இரகம் நோய் எதிர்ப்புச் சக்தியுள்ளது
  • நோய் எதிர்ப்பு இரகங்களைப் பயிரிடுவதால் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்
  • 1% போர்டாக்ஸ் கலவை (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கி(அ) 2.5 கிராம் ஜனிப் /லி தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016