பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள் |
ஆல்டர்னேரியா இலைப்புள்ளி
அறிகுறிகள்
- இலைப்புள்ளிகளில் வெடிப்புகள் காணப்படும்
- ஆல்டர்னேரியாவின் இரண்டு வகைகளும் பொதுவாகத் தோன்றும்
- இலைப்புள்ளிகள் அடர் வளையங்களுடன் சேர்ந்து காணப்படும்
- ஓழுங்கற்ற வடிவத்தில், 4-8 மி.மி அளவில் புள்ளிகள் தோன்றி, இலைப்பரப்பு முழுவதும் பரவி செடிகள் உருக்குலையும்.
- நோய் அதிகம் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்
- ஆ.மெலான்ஜினா பழங்களையும் தாக்கி, அடர் நிறத்தில் பெரிய புள்ளிகளை உருவாக்கும்
- தாக்கப்பட்ட பழங்கள் மஞ்சள் நிறத்தில் மாறி, முதிர்வதற்கு முன்னரே உதிர்ந்துவிடும்
|
|
|
பாதிக்கப்பட்டஇலை |
பொதுமைய வளையம் |
கட்டுப்பாடு
- 1% போர்டாக்ஸ் கலவை (அ) 2கி காப்பர் ஆக்ஸி குளோரைடு (அ) 2.5 கிராம் ஜினாப்/லிடடர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
|
|