பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள் |
புகையிலை தேமல் நச்சுயிரி
அறிகுறிகள்
- இலைகள் பல்வண்ணத் தேமலுடன் காணப்படும். செடிகள் குட்டை வளர்ச்சியுடன் உருளைகிழங்கு நச்சுயிரி Y யின் தேமல் அறிகுறிகள் போன்றே ஆரம்பநிலையில் தாக்குதல் குறைவாகவும், பின் அதிகமாகவும் காணப்படும்
- தாக்கப்பட்ட இலைகள் உருமாறி, சிறியதாக, இறகு போன்று மாறும். மிகச் சிறிய பழங்கள் தோன்றும்
- குறிப்பிடத்தக்க தெளிவான பல்வண்ணத் தேமல் காணப்படும்
- நோயின் தாக்கம் அதிமாகும் போது கொப்பளங்கள் தோன்றும். இலைகள் சிறியதாக, இல்லாதது போன்று காணப்படும். செடிகள் குட்டை வளர்ச்சியுடன் காணப்படும்
- உருளைக்கிழங்கு நச்சுயிரி Y சாற்றின் மூலம் பரவும்.
- அசுவினிகள், ஏபிஸ் காசிப்பி, மைசஸ் பெர்சிகே மூலம் பரவும். களை ஒம்புயிரிகளைான சொலானம் நைக்ரம், சொ, சேந்தோகார்பம் போன்றவற்றில் உயிர் வாழும்
- புகையிலை தேமல் நச்சுயிரி, இலையின் சாறு, சுத்தம் செய்யப்படாத கருவிகள், துணிகள், மண் குப்பைகள், வேலையாட்களின் கைகள் மூலம் பரவும்
- பூசணி வகைகள், பயிறு வகைகள், மிளகு, புகையிலை, தக்காளி மற்றும் களை ஒம்புயிரிகள் மண் குப்பைகளில், உயிர் வாழும்.
|
|
|
நோயற்ற இலைகள் |
நோயுள்ள இலைகள் |
|
கட்டுப்பாடு
- அனைத்து களைகளை அழிக்க வேண்டும். வெள்ளரி, மிளகு, புகையிலை, கத்தரி விதைப் படுக்கை மற்றும் வயலுக்கு அருகில் தக்காளி பயிரிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
- விதைப் படுக்கைகளில் வேலை செய்வதற்குமுன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்
- கத்திரி நாற்றுக்களை கையாளும் போது, புகை பிடிப்பது (அ) புகையிலையை மெல்லுவது தவிர்க்கப்படவேண்டும்
- டைமெதோயேட் 2 மிலி/லி (அ) வெமட்டிஸிஸ்டாக்ஸ் 1 மி.லி/லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
|
|