பயிர் பாதுகாப்பு :: முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

கரும்புக் கால் நோய்: போமா லிங்கம்

அறிகுறிகள்:

  • போமா லிங்கம் மூலம் நோய்த் தோன்றுகிறது. வளரும் பருவத்தில் மழை பெய்யும் இடங்களில் இந்த நோய் தோன்றும்.
  • விதையின் மூலம் பரவும்.
  • தண்டுப்பகுதியை நேராகா வெட்டிப்பார்த்தால், கருமைநிற நிற மாற்றம் காணப்படும்.
  • முழுத்தண்டும் அடியிலிருந்து மேல்நோக்கி அழுகும்.
  • அடிக்கடி செடிகள் வயலில் மடிந்துக் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு (அ) அங்கக மெர்குரி பொருட்களை தெளிப்பதால் விதை தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • தீகப்டான் (அ) திரம் மகிராம்/ கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம்/கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • பூசா டிரம் ஹெட் சிறிதளவு நோய்த் தாக்கக் கூடியது.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015