பயிர் பாதுகாப்பு :: முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல் நோய்: ரைசோக்டினியா சொலானி

அறிகுறிகள்:

  • இளம் செடிகளின் தண்டுப்பகுதியில் மென்மையான நீரில் ஊறிய புள்ளிகள் தோன்றும். இதனால் வித்திலைகள் வாடி, செடி முழுவதும் தரையில் விழுந்து அழுகிவிடும்.
  • வளர்ச்சிப் பருவத்தின் பிந்தைய நிலையில் நோய் தாக்கினால், செடிகளின் கீழ்ப்பகுதியில் நிறமாற்றம் ஏற்படும். செடிகள் தடித்து, காய்ந்து காணப்படும்.

கட்டுப்பாடு:

  • நாற்றங்கால் படுக்கைகளில், மீத்தைல் பிரோமைடு (கிலோ/10 மீ) 2 என்ற அளவில் மண்ணில் நனையுமாறு இட வேண்டும்.
  • கேப்டான் (அ) தீரம் 4 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015