பயிர் பாதுகாப்பு :: முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர்முடிச்சு நோய்: ப்ளாஸ்மோடியோபோரா ப்ரேஸிக்கா

அறிகுறிகள்:

  • குட்டை வளர்ச்சி மற்றும் செடிகள் மஞ்சளாதல்
  • இலைகள் மஞ்சளாதல் மற்றும் வெயில் காலங்களில் வாடும்.
  • வேர்களில் வேர்முடிச்சு காணப்படும்.
  • மண்ணில் கார அமிலத்தன்மை 7-க்கும் குறைவாகும் போது, இந்த நோய் தோன்றும்.

கட்டுப்பாடு:

  • மீத்தைல் ப்ரோமைடு 1 கிலோ/ 10 மீ2 என்ற  அளவில் மண் புகையூட்டம்  செய்ய வேண்டும்.
  • கேப்டான் (அ) திரம் மகிராம் / கிலோ விதை, தொடர்ந்து டிரைகோடெர்மா விரிடி  4 கிராம்/ கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • சுண்ணாம்பு 2.5 டன் / ஹெக்டர் என்ற அளவில் மண்ணில் நனையுமாறு இட வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015