பயிர் பாதுகாப்பு :: முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் நோய்கள் |
பாக்டீரியா நோய்கள்: கருப்பு அழுகல் நோய்
அறிகுறிகள்:
- இலைப்பரப்பில் ‘V’ வடிவ மஞ்சள்நிறப் புள்ளிகள் விளிம்பிலிருந்து தோன்றி இலையின் நடு நரம்பு வரை பரவும்.
- இந்த புள்ளிகளுடன் கருப்பு நிற நிறமாற்றம் சேர்ந்து காணப்படும்.
- சைலம் மற்றும் வாஸ்குலர் திசுக்களை பார்த்து, கருப்பு நிறமாகி மற்றும் நோயின் தாக்கம் அதிகமாகும் போது, இலை முழுவதும் நிறமாற்றம் ஏற்பட்டு, கீழே விழுந்துவிடும்.
கட்டுப்பாடு:
- ஆரியோமைசின் 100 பிபிஎம் 30 நிமிடங்களுக்கு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
- நாற்றங்கால் மண்ணுடன் பார்மால்டிரைடு 0.5% மண்ணில் நனையுமாறு இட வேண்டும்.
- ப்ளீச்சிஸ் தூள் 10.0 முதல் 12.5 கிலோ / ஹெக் என்ற அளவில் இட வேண்டும்.
|
|
|