பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காய்ப்பேன்: சியோதிரிப்ஸ் கார்டமோமி
சேதத்தின் அறிகுறிகள்

  • பூச்சரம் குட்டையாக இருக்கும்
  • பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து விடுவதால் காய்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.
  • பிஞ்சுகளின் மேற்பரப்பைச் சுரண்டி சாற்றை உறிஞ்சுவதால் சொரசொரப்பான சொறி போன்று ஏற்பட்டு பிஞ்சுகள் சுருங்கிப் போவதால் காயின் தரம் குறையும்.
  • விதைகளில் நிறம் கெட்டு, எடைக் குறைந்து, வாசனைக் குன்றிப்போகும்.

பூச்சியின் விபரம்:
முட்டை

  • சிறு நீரக வடிவமுடையது. இளம் தளிர் மற்றும் பூக்களின் மீது தனித்தனியாக இடும்.

பூச்சி

  • காய்ப்பேன் நுண்ணியதாகவும், சாம்பல் கலந்த பழுப்பு நிறமாகவும் சீப்புப் பற்கள் போன்ற இறக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தோட்டத்தில் நிழல்கள் ஏற்படுத்துவதை ஒழுங்குபடுத்தவும்.
  • குயினல்பாஸ் 0.025 சதம் அல்லது ஃபாஸோலோன் 0.07 சதம் மார்ச் முதல் ஆகஸ்டு மாதங்களில் தெளிக்கவும்.

குறிப்பு
மிகச்சிறந்த காய்ப்பேன் மேலாண்மைக்கு கடைப்பிடிக்க வேண்டியவை.

  • பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு முன்பு தோகை உரிக்கவேண்டும்.
  • மழைப் பெய்யும் பொழுது பூச்சிக்கொல்லி தெளிக்கக்கூடாது.
  • 250-500 மிலி தெளித்திரவத்தை செடியின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் உபயோகிக்கலாம்.


http://www.spices.res.in/package/cardamom/thrip.jpg
காயில் சொரசொரப்பான சொறி

 

Heliohaem_sm
பூச்சி
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016