சேதத்தின் அறிகுறிகள்:
- முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் மலராத மொக்குகளையும் இலைத்திசுக்களையும் சாப்பிடும்.
- புழுக்கள் பூச்சரத்தினை துளையிட்ட சாப்பிடும் அதனால் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து விடும்.
- பிஞ்சுகள் மற்றும் இளம் விதைகளையும் சாப்பிட்டுக் காய்களை பொக்குகளாக மாற்றி விடுகின்றன.
- வளர்ந்த புழுக்கள் போலித்தண்டுகளை துளையிட்ட அதன் மையப்பகுதியை சாப்பிடும். இதனல் நுனியில் உள்ள இலைகள் காய்ந்து நடுக்குருத்து காய்தல் என்றத் தெளிவான அறிகுறியை ஏற்படுத்தும்.
- நடுக்குருத்து காய்தல் என்றத் தெளிவான அறிகுறியை ஏற்படுத்தும்.
- புழுக்கள் குருத்துக்களை குடைந்து தாக்கி கழிவுப் பொருட்களை வெளித்தள்ளியிருக்கும்.
- இப்பூச்சியின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருக்கும். இருப்பினும் அதிகச் சேதாரம் டிசம்பர் - ஜனவரி, மார்ச்-ஏப்ரல், மே-ஜீன் மற்றும் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் இருக்கும்.
-
|
|
|
நடுக்குருத்து காய்தல் |
புழு |
பூச்சி |
பூச்சியின் விபரம்:
- முட்டை: இளஞ்சிவப்பு, தட்டையான நீள்வட்ட வடிவில் தனியாகவோ அல்லது குவியலாகவோ இளம் தளிர்களின் மீது இடும்.
- புழு: இளஞ்சிவப்பு உடலையும், தலை மற்றும் முன் மார்புக்கவசப் பகுதியும் பழுப்பு நிறத்திலும், உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் கொண்டிருக்கும்.
- கூட்டுப்புழு: பட்டுக்கூட்டில் தண்டில் உள்ள இலைகளில் இருக்கும்.
- பூச்சி: அந்துப்பூச்சி சிறியதாக இருக்கும்.
- மஞ்சள் நிற இறக்கையில் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பகல் நேரங்களில் அந்துப்பூச்சி இலையின் அடிப்பரப்பில் அமர்ந்திருக்கும் அவற்றை பூச்சி வலைக் கொண்டு சேகரித்து அழிக்கவும்.
- நடுக்குருத்து காய்த்ல் அறிகுறி உள்ள செடிகளை களைந்து அகற்றவேண்டும்.
- பூச்சியின் கழிவுப்பொருட்கள் வெளித்தள்ளியிருக்கும் தூர்களைக் களைந்து அகற்றவேண்டும்.
|