பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காய்த்துளைப்பான் : மையுஸ் வகை
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் பூங்கொத்து மொட்டுக்கள், பூக்கள் மற்றும் காய்களை உண்டு சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட காய்களில் உள்ளிருக்கும் விதை முழுவதும் சாப்பிட்டிருக்கும். மேலும் காய்களின் மேற்பரப்பில் வட்டவடிவ துளை இருக்கும், காய்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறி, அழுகி, மழைக்காலங்களில் உதிர்ந்து விடும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: கோள வடிவ பச்சைக் கலந்த வெள்ளை நிறமுட்டை பூச்சரத்தில் இடும்.
  • புழு: தட்டையானது, உடல் முழுவதும் மெல்லிய உரோமங்களைக் கொண்டிருக்கும்.
  • கூட்டுப்புழு: சிறியது, பழுப்பு நிறமானது.
  • பூச்சி: அந்துப்பூச்சியின் இறக்கைகள் உலோக நீலநிறத்தல் இருக்கும். இறக்கையின் ஓரங்களில் மெல்லிய வெண்ணிற கோடுகளும், கருப்புத் திட்டுக்களும் இருக்கும்.

Image source:

http://sgbug.blogspot.in/2009_08_01_archive.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016