கம்பளிப் புழுக்கள் : யூப்டிரோட் கார்டமோமி, யூ கனரெய்க்கா, யூம்ஃபேபியா
சேதத்தின் அறிகுறிகள்:
- தழைப்பகுதிகளை உண்டு சேதத்தை உருவாக்கும்.
- புழுக்கள் கூட்டமாக வாழும் பழக்கமுடையது. பகலில் நிழல் தரும் மரத்தின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும். இரவில் இவை கீழே வந்து ஏலக்காயை சாப்பிடும்.
- ஏலக்காயை செடியில் உள்ள இலைகள் முழுவதும் சாப்பிட்டு இலைகளற்று காணப்படும்.
- இதன் தாக்குதல் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் இருக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: நிழல் மரங்களின் இலையின் அடிப்பகுதியில் குவிமாடம் போன்று வடிவுடைய முட்டைகளை இடும்.
- புழு: கருநீல நிறத்தில் இருக்கும், பழுப்பு நிறத்தலையுடன், உடலின் மேற்பரப்பில் கூம்பு வடிவில் கொத்து கொத்தாக உரோமங்கள் இருக்கும்.
- பூச்சி: அந்துப்பூச்சியின் இறக்கையில் வெளிர் மஞ்சள் வலைக்கோடுகள் இருக்கும் மேலும் ஓரங்களில் புள்ளிகள் இருக்கும்.
யூ கனரெய்க்கா
- முட்டை: வெளிர் மஞ்சள் நிற முட்டையை நிழல் ஏற்படுத்தும் மரங்களின் இலைகளின் அடிப்பரப்பில் இடும்.
- புழு: கொழுகொழுவென இருக்கும் சிவப்பு நிறத் தலையில் கருப்பு நிற வி வடிவ தழும்பு இருக்கும்.
- பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில இருக்கும். இறக்கையில் குறுக்கு நெடுக்கான கோடுகள் இருக்கும்.
யூஃபேபியா
- புழு: கொழுகொழுவென இருக்கும் கரும் ஊதா, பழுப்பு நிறத்தில் இருக்கும். தலைக் கருப்பாக இருக்கும். சாம்பல் நிற உரோமங்களை உடல் முழுவதும் கொண்டிருக்கும்.
- கூட்டுப்புழு: காய்ந்த இலைகளில் இருக்கும்.
- பூச்சி: மஞ்சள் நிற அந்துப்பூச்சி, கருப்பு நிற வளைக்கோடுகளையும் திட்டுக்களை இறக்கையில் கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- நிழல் தரும் மரங்களில் முட்டையுடன் உடைய இலைகளைச் சேகரித்து எரித்துவிட வேண்டும்.
- நிழல் தரம் மரங்களின் அடிப்பகுதியில் இருக்கும் புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
- அந்துப்பூச்சிகளை விளக்குப்பொறி வைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
- எண்டோசல்ஃபான் அல்லது மோனோக்குரோட்டோஃபாஸ் அல்லது குவினால்ஃபாஸ் 3 மிலி / லிட்டர் தெளிக்கலாம்.
|
|