தண்டு ஈ: பார்மோசினா ஃபிளவிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- ஏலக்காயின் இளம் பக்கக் கன்றுகளின் தளிர்களை புழுக்கள் உண்டு சேதப்படுத்தும்.
- நடுக்குருத்து காய்தல் உருவாக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: வெண்ணிற சுருட்டு வடிவ முட்டையை பக்கக்கன்றுகளின் வட்ட அடுக்குகளிலும், இலையுறைகளிலும் இடும்.
- பூச்சி: ஈ போன்றது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்கவும்.
- டைமீதோயேட் அல்லது குவினால்ஃபாஸ் 0.05 சதவிகிதம்.
|
|