வெள்ளை ஈ : டைஅலூரோடிஸ் கார்டாமோம்
சேதத்தின் அறிகுறிகள்:
- வெளிப்பச்சை புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
- இலைகள் மஞ்சளாக மாறும்.
- இலைகள் அடிப்புறத்தில் சுருண்டு பிறகு காய்ந்து விழுந்துவிடும்.
- இப்பூச்சிகளின் தாக்கத்தினால் தக்காளி இலைச்சுருள் என்னும் வைரஸ் நோய் பரவுகின்றது.
பூச்சியின் விபரம்:
- முட்டை : இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்.
- இளம்குஞ்சுகள் : முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
- முதிர்பூச்சிகள் : சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்.
|
|