அசுவினி: பென்டலோனியா நைக்ரோநெர்வோசா
சேதத்தின் அறிகுறிகள்:
- போலித் தண்டுகளின் இலையுறையின் அடியில் அசுவினிகள் இருந்து சாற்றை உறிஞ்சும்.
- கட்டே என்ற வைரஸ் நோய் பரவ இப்பூச்சிகள் காரணிகளாக உள்ளன.
- இலைகள் வெளிறிப் போய் தேமல் போன்று காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- இறக்கைகளற்ற அசுவினி கரும்பழுப்பு நிறத்தில இருக்கும்.
- இறக்கைகள் உள்ள அசுவினிகள் தடித்த கருமை நரம்புகள் இறக்கையில் தெரியும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- ஏலக்காய் வயலில் இருக்கும் கருணைக் கிழங்கு மற்றும் வேறு உணவுப் பயிர்களை அகற்றவேண்டும்.
- பாதிக் காய்ந்த மற்ற அழுகிய போலித்தண்டுகளை அசுவினிகளுடன் சேர்த்து சேகரித்து அழிக்கவும்.
- டைமீத்தோயேட் 2மிலி / லிட்டர் இரண்டு வார இடைவெளியில் தழைகளின் மீது தெளிக்கவும்.
|