பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வேர்ப்புழு: பேசிலெப்டா ஃபல்விகார்னி,ஹோலேட்ரைக் ஸெறேட்டா
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் வேர்களை சுரண்டித் தின்னும்.
  • முற்றிய நிலையில் வேர்கள் முழுவதும் தாக்கப்பட்ட அழுகிக் காய்ந்து விடும்.
  • இலேசாக இழுத்தாலும் செடிக் கையேடும் வந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

  • வண்டினப்புழு வெண்ணிறத்தில் சி வடிவில் இருக்கும்.
  • வண்டு பளபளப்பான நீலநிறத்தில் அல்லது பச்சை நிறத்தில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • வண்டுகளை ஏப்ரல் - மே மாதங்களில் சேகரித்து அழிக்கவும்.
  • செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் குளோர்பைரிஃபாஸ் 0.075 சதம் அல்லது ஃபோரேட் 2.4 கிராம் / செடி மண்ணிலிட்டு கிளிறிவிடவேண்டும்.

Image Source:

http://www.plantwise.org/KnowledgeBank/Home.aspx


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016