ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை டயாள்தி
அறிகுறிகள்:
- இந்நோயின் தாக்குதலினால் செடியின் ஆரம்ப காலத்திலே இலைகளின் நிறம் மாறி படிப்படியாக இலைகளும் செடியின் தண்டுகளும் வாடிக் காணப்படும்.
- பின்னர் பாதிக்கப்பட்ட செடி முழுவதும் காய்ந்து காணப்படும்.
- முதிர்ந்த செடிகளிலும் இதே போன்ற அறிகுறிகள் காணப்படும். ஆனால் அதில் இலைகள் மஞ்சளாகி பின்னர் ஊதா – சிவப்பு நிறத்தில் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட தண்டுகளின் வாங்குலர் திசுக்கள் அடர் பழுப்பு நிறமாக்குகின்றன.
- முதிர்ந்த செடிகள் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே காய்ந்து அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன மற்றும் வைக்கோல் நிறத்திற்கு மாறிவிடுகின்றன.
மேலாண்மை:
- நோயுற்ற செடியை உடனடியாக நீக்கிவிட வேண்டும். வேர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மண் முழுவதையும் தோண்டி கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.
- பாலியெத்திலின் (0.1 மிமீ தடிமம்) மூலம் 30 நாட்களுக்கு மண்ணை வெப்ப மூட்ட வேண்டும்.
Image Source: http://pnwhandbooks.org/plantdisease/carnation-dianthus-caryophyllus-fusarium-wilt |
|
செடி வாடல் |
|