பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: கேரட
க்ரேட்டர் அழுகல்: ரைசோக்டோனியா கரோடே
தாக்குதலின் அறிகுறிகள்:
  • கேரட்களின் மேல் பகுதி மற்றும் மேல் வேர்களை சுற்றி அடர்ந்த பழுப்பு நசிவு மற்றும் கிடைமட்டமாக பழுப்பு பிளவு போன்ற புண்கள் தோன்றும்.
  • அதை தொடர்ந்து புண்களின் கீழே சிறிய குழிகள் உருவாக்கி பின்பு மூழ்கிய பழுப்பு பள்ளம் வரிகளாய் பெரிதாக்கி வெள்ளை கம்பளி நூல் பூசணம் அதிக ஈரப்பத நிலையில்உருவாக்கப்படுகிறது.

கசப்புத்தன்மை:

  • கேரட் குளிர் சேமிப்பின் போது சுவை இல்லாமல் அல்லது கசப்பு தன்மை கொண்டு இருக்கும். ஐசொகுமாரின் என்ற கூட்டு இதற்கு காரணமாகும். கேரட் எத்திலீன் உடன் படும் போது  ஐசொகுமாரின்  உருவாகிறது.
  • எத்திலீன் ஒரு வாயுவாகும். பல பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கையாகவே இதை உற்பத்தி செய்யும். ஆப்பிள்கள், வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி பழுக்கும் போது எத்திலீனை உற்பத்தி செய்கிறது.

பினாலிக் பழுப்புநிறமாக்கல்:

  • பினாலிக் பழுப்புநிறமாக்கல் (அல்லது பரப்பு பழுப்புநிறமாக்கல்) என்பது கேரட் மேற்பரப்பில் நிறமாற்றம் அல்லது பழுப்பு நிறமாக்கல் ஆகும்
  • கேரட் கழுவுதலின் போது மற்றும் நீண்ட காலத்திற்கு குளுமையான அறைகளில் சேமிக்கும் போது பினாலிக் பழுப்புநிறமாக்கல் உருவாகிறது.
  • இயந்திர கழுவுதல் மூலம் ஏற்படும் சிராய்ப்புகளால் வெளிப்புற தோல்கள் பினாலிக் கூட்டு ஆக்ஸிடேஷன் மேற்கொண்டு பழுப்பு நிறமாக மாறுகிறது  அல்லது கடுமையான சூழ்நிலையில் கருப்பு நிறமாக மாறும்.
  • அடிக்கடி பினாலிக் பழுப்புநிறமாக்கல் போரான் குறைபாடு உடன்  இதனை  குழப்பி கொள்வது வழக்கமாகும்.
  • பல சிறிய பழுப்பு புள்ளிகள் தோலுக்கு அடியில் தோன்றி வேர்களை   மந்தமாக இருக்க செய்யும்.
   
அடர் பழுப்பு நசிவு   பிளவு போன்ற புண்கள்  

நோய் காரணி:

  • பாக்டீரியா -ve, அசையும் தன்மை உடன் பெரிய புறச்சுற்றில் நகரிழைகள் கொண்டு இருக்கும்.

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • மண்ணில் உயிர் வாழும்
  • சிதைந்த குப்பைகளில் உயிர் வாழும் மற்றும் சாகுபடி காயங்கள், அறுவடை காயங்கள், அதிகப்படியான குளிர் மற்றும் பூச்சிகள் மூலம் பரவுகிறது
  • ஈக்கள்- ஹைளிமஸ்சிளிக்ருரா, ஹைளிமஸ்பராச்சிகே அவர்களின் குடல் தடங்கள்  முலம் கொண்டுசெல்கின்றனர்
கட்டுப்படுத்தும் முறை:
  • நிலம் வெப்பம் அடைவதை தடுக்கவும்
  • டோவிசைடு @ 98 கி/லி இடுதல்
  • 6-மிதொக்சி மெலன் எதிர்ப்பு அதிகரிக்கிறது
  • க்லோரோதாலோன், விதை மற்றும் மண்ணில் இடுதல்
  • எட்டு ஆண்டுகளுக்கு  புரவலன் அல்லாத பயிர் உடன் சுழற்சி
  • நோய் இல்லாத விதைகளை பயன்படுத்துதல்
  • பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் ட்ரைகொக்ராமாவிரிடே இடுதல்
Source of Images:
http://phytopath.ca/wp-content/uploads/2015/03/DPVCC-colour-plates-chapter-6-carrot.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015