பயிர் பாதுகாப்பு :: கேரட் பயிரைத் தாக்கும் நோய்கள்

செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் : செர்கோஸ்போரா கரோட்டே

அறிகுறிகள்:

  • இலைகளில் நீளமான புள்ளிகள் முதலில் தோன்றும்
  • விளிம்புகளில்லாத புள்ளிகள் சிறியதாக, மிகத் துல்லியமாக பசுஞ்சோகை புள்ளிகள் தோன்றி, நடுவில் காய்ந்து காணப்படும்
  • பொதுவாக இந்தப் புள்ளிகள் ஒன்றிணைந்து காணப்படும்
  • இலைக்காம்புகளில் அடர் நிறப் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் பிளவுப்பட்டு காணப்படும். முடிவில் இலைகள் மடிந்துவிடும்

கட்டுப்பாடு:

  • கேப்டான் 4 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு (அ) மேன்கோசெப் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்



செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

Image Source:

www.nysipm.cornell.edu/factsheets/vegetables/misc/clb.pdf

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015