பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் நோய்கள் |
தேமல்
அறிகுறிகள்
-
இலையின் அளவு குறையும், இலையின் வடிவம் உருமாறி முறுக்கிக் காணப்படும்
-
பாதிப்படைந்த செடிகளில், கிழங்கு பிளவும்பட்டுக் காணப்படும் மற்றும் செடியின் வளர்ச்சியும், விளைச்சலும் குறைந்துவிடும்
-
விதை காரணிகள் மற்றும் வெள்ளை ஈ பெமிசியா டபாசி போன்றவையால் நச்சுயிரி பரவும்
கட்டுப்பாடு
- நல்ல ஆரோக்கியமான செடிகளிலிருந்து விதை காரணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
- பாதிக்கப்பட்ட செடிகளை ஆரம்ப நிலையிலேயே அகற்ற வேண்டும்
- வெள்ளை ஈ கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுபொறி மூலம் கட்டுப்படுத்தலாம் மற்றும் களை ஓம்புயிரி அகற்றுதல், வேப்ப எண்ணெய் 3% அளவில் தெளிக்கவும் அல்லது மீத்தேல் டேமட்டான் 2 மி.லி தெளிக்கவும்
- டைமெத்தோயேட் 1 மி.லி. அளவில் தெளிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம்
- தமிழ்நாடு மற்றும் கேரளா ஏற்ற நோய் எதிர்ப்புச்சக்தியான சிடிசிஆர்ஆர்ஐ கோ(டிபி) 5 - ஸ்ரீபத்பநாபா இரகங்களுக்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும்.
|
|
|