பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
தண்டு மற்றும் காய்த்துளைப்பான்: கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு பூக்கும் தருணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்
- புழுக்கள் காய்களையும், காயின் தண்டுகளையும் துளைத்து உட்சென்று தின்று அழிக்கும்
- புழுக்கள் காய்களின் இடைப்பட்ட பகுதியில் நூலாம் படையின் அடிப்பரப்பில் இருந்து சேதத்தை ஏற்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
- புழு: புழு இளம் பச்சை நிறத்தில் இருக்கும். புழுவின் மேற்பகுதி இளஞ்சிவப்பு நிறத்துடனும் மெல்லிய ரோமங்களுடனும்காணப்படும்
- அந்துப்பூச்சி: மஞ்சள் நிறமுடையது, முன் இறக்கையில் கரும் புள்ளிகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- பூக்கும் தருணத்தில் மருந்துத் தெளித்தல் அவசியம்
- பின்வரும் பூச்சிக்கொல்லியை பூக்கும் பருவத்தில் முன்று முறை முன்று வாரம் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
- மாலத்தையான் 50 2.0 மி.லி/ஹெக்டேர்
- கார்புரைல் 50 WP @ 2.0 கி.கி/ஹெக்டேர் என்ற அளவில் 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
|
|
|
|