பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
துசாக் புழு: அர்க்கயா(நோட்டோலோப்ஸ்) போஸ்டிகா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு கலைகளை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்துகிறது.இறுதியாக செடி முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது
பூச்சியின் அடையாளம்:
- புழு: தலைப்பகுதியானது பழுப்பு நிறத்துடனும் ,முதுப்பதியில் சிறிய ரோமங்களுடனும் காணப்படும் .வயிற்றுப் பகுதியில் இரண்டாவது அடுக்கில் மஞ்சள் நிற ரோமங்களுடன் எட்டாவது அடுக்கில் பழுப்பு நிற ரோமங்களும் காணப்படும்.
- அந்துப்புச்சி: ஆண் பூச்சியானது பழுப்பு நிறத்துடனும்,பெண் புச்சியானது இறகுகள் இன்றியும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- புச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பங் கொட்டைச் சாறு 5% அல்லது குளோரோபைரிபாஸ் 2.5 மி.லி அல்லது குயின்லோபாஸ் 2 மி.லி அல்லது வேப்ப எண்ணெய் 5 மி.லி/ லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
|
|
|