பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
ஆமணக்கு முட்புழு: ஏர்கோலிஸ் மெரியோன் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- முட்புழு இலையைத் தின்று சேதப்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
- புழு: பச்சை நிறத்திலிருக்கும், உடல் முழுவதும் கொத்து கொத்தாக பிளவு பட்ட ரோமங்கள் காணப்படும்
- அந்துப்பூச்சி: பழுப்பு வண்ணத்துடன் இறக்கைகளின் குறுக்காக அலை அலையாய் வளைந்த கோடுகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம் கொட்டை சாறு 5 சதம் தெளிக்கவும்
- குளோர்பைரிபரஸ் அல்லது குயினால்பாஸ் 2 மிலி மருந்தை அல்லது வேப்பம் எண்ணெய் 5மிலி மருந்தை1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
|
|
|