புகையிலை புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- வளர்ச்சியடைந்த புழு இலையைத் தின்று சேதப்படுத்தும்
- சேதம் அதிகமாகும் நிலையில் புழு கணு மற்றும் கிளைகளைத் தவிர அனைத்து பாகங்களையும் தின்று சேதப்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
- முட்டை: பெண்அந்துப்பூச்சி முட்டையை குவில்களாக இடும். முட்டை பழுப்பு நிறத்திலிருக்கும்
- புழு: இளம்பச்சை நிறத்திலும் கருமை நிறக்கோடுகள் உடலின் மேற்பரப்பில் காணப்படும்
- அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்புநிறத்தில் இருக்கும். வெள்ளை நிறகோடுகள் இறக்கையில் குறுக்கே காணப்படும். பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இறக்கையின் ஓரத்தில் பழுப்பு நிறதிட்டுகள் காணப்படும்
|
|
கட்டுப்படுத்தும் முறை:
- ஆரம்ப நிலையில் முட்டைக் குவியலையும், புழுக்களையும் கைகளால் சேகரித்து அழிக்கலாம்
- கோடைக் காலங்களில் நிலத்தை உழவு செய்து அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
- இனக்கவர்ச்சி பெரறியை ஏக்கர்க்கு 4-5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
- வேப்பஞ் கொட்டை சாறுக் 5 சதம் அல்லது குளோர்பைரிபாஸ் 2.5மிலி மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து இளம்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்கலாம்
- நச்சு உணவை 1 கிலோ கரர்பரில்தூள்+ 10 கிலோ அரிசிதவிடு+1 கிலோ பனங்கட்டி+1 லிட்டர்தண்ணீர்) எக்டர்க்கு ஒன்று வீதம் அமைத்து வளர்ச்சியடைந்த புழுவை அழிக்கலாம்
|