பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- முட்டையிலிருந்து வெளிவரும் புழு இலையின் அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்
- தீவிர தாக்குதலின் போது செடியானது முழுவதுமாக அழிக்கப்படும்.
பூச்சியின் அடையாளம்:
- முட்டை: பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் 50-100 முட்டையைக் குவில்களாக இடும்
- புழு:ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிறமுடிகள் காணப்படும்
- கூட்டுப்புழு: உதிர்ந்த ரோமங்களைக் கொண்டு கூடுகட்டி அதனுல் இருக்கும்.
- அந்துப்பூச்சி:ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- முட்டை க்குவியலையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்
- வேப்பங் கொட்டை சாறு 5 சதம் தெளித்து இளம் புழுக்களை அழிக்கலாம்
- குயினால்பாஸ், குளோர்பைரிபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து வளர்ச்சியடைந்த புழுவை அழிக்கலாம்
|
|
|