பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மிளகாய் பேன்: சிர்ட்டோதிரிப்ஸ் டார்சாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பூச்சி தாக்கப்பட்ட இலைகளில் சுருக்கங்கள் ஏற்படும் இலைகள் மேல்நோக்கி சுருண்டுவிடும்
  • இலைக்காம்பு நீண்டுவிடும்
  • மொக்குகள் எளிதில் நொறுங்கத்தக்கதாக மாறி கீழ் உதிர்ந்துவிடும்
  • பூச்சி தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றுவதோடு, பூ மற்றும் காய்கள் உற்பத்தி தடைபடுகின்றது

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சுகள்: மிகச்சிறிய, நீளமானது எளிதில் உடைகிற உடலினை உடையது.
  • வைக்கோலின் மஞ்சள் நிறம் போன்று இருக்கும்.
  • பூச்சி: மயிரிழைகளால் ஆன இறகுகளை உடையது.
மேல்நோக்கி சுருளுதல் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • ஊடுபயிராக அகத்திய பயிரிடவும் இதன் நிழலானது மிளகாய்பேன் உயிர்தொகையை முறைப்படுத்துகிறது
  • சோளம் பயிரிட்ட நிலத்தில் மிளகாய் உடனடியாக சாகுபடி செய்யக்கூடாது
  • மிளகாயில் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யக்கூடாது
  • நாற்றுகளின் மேற்பரப்பில் நீரைத் தெளித்தால் பேன்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
  • நாற்றுகளில் மீது தண்ணீரை தெளிப்பதன் மூலம் இலைப்பேனின் பெருக்கமானது கட்டுப்படுத்தப்படுகிறது
  • ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோபிரிட் 70% WS @12கி என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • கார்போஃபியூரான்3% G @ 33 கி.கி/எக்டர் (அ) போரேட் 10% G @10 கி.கி/எக்டர் என்று அளவில் தெளிக்கவும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும்


பூச்சிகொல்லி அளவு
இமிடாக்லோர்பிட் 3.0 மி / 10 லி
டைமெத்தொயேட் 30 % EC 1.0  கி / லி
எமாமெக்டின் பென்ஜொவேட் 5 % SG 4  கி / லி
எத்தியான் 50 % EC 2.0  மி / லி
ஃபைரோனில் 5 % SC 1.5 மி / லி
ஆக்சிடெமட்டான் / மீத்தையில் 25 % EC 1.0 மி / லி
போசலோன் 35 % EC 2.0 மி / லி
ஸ்பினோசேடு 45 % SC 3.2 மி / 10 லி
தையோக்லோர்ப்ரிட் 21.7 % SC 6.0 மி / 10 லி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016