தாக்குதலின் அறிகுறிகள்:
- அசுவிணி தாக்கப்பட்ட செடிகள் வெளுத்து போய் நோயால் பாதிக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கும்
- இலையில் சுருக்கங்கள் ஏற்பட்டு சுருண்டு விடும்
- அசுவிணி வெளியேற்றும் தேன் துளி கரும்புகைப் பூசணம் ஏற்படுத்துகிறது
- அசுவிணி தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகிவிடும்
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சு: முட்டையிலிருந்து வெளிவருபவை பச்சையாகவும் பிறகு மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும்
- பூச்சி: மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோபிரிட் 70% WS @ 12கி என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
- போரேட் 10% G @ 10 கி.கி/எக்டர் என்று அளவில் தெளிக்கவும்
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும்
|
|
|
இளம் குஞ்சு |
பூச்சி |
பூச்சிகொல்லி |
அளவு |
கார்போசல்பான் 25 % EC |
1.0 மி/லி |
ஃப்ரோனில் 5 % SC |
1.0 மி/லி |
இமிடாகுளோப்ரிட்17.8 % SL |
3.5 மி/10 லி |
ஆக்ஸிடெமடான் – மீதைல் 25% EC |
1.6 மி/லி |
போசலோன் 35 % EC |
2.0 மி/லி |
குயின்னால்பாஸ் 25 % EC |
1.0 மி/லி |
|