பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
புகையிலை வெட்டுப்புழு : ஸ்போடாப்டிரா லிட்ரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும்
  • இலைகளை சல்லடை போல் அரித்து வெள்ளை நிறத்தில் இலையின் நரம்புகள் மட்டும் இருக்கும்
  • வளர்ந்த புழுக்கள் இலைகளில் சிறு துளைகளை விட்டு சாப்பிடும்
  • வளர்ந்த புழுக்களின் தாக்குதல் தீவிரமானால் செடி முழுதையும் கண்டபடி சாப்பிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: தாய்ப்பூச்சி இலையில் சந்தனப் பொட்டு போன்று குவியலாக முட்டையிட்டு உரோமத்தால் மூடும்.
  • புழு: இளம்புழுக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கும். புழு கருமை கலந்த பச்சையாகவும், தலைப்பகுதிக்குச் சற்று பின்புறத்தில் இரண்டு கருப்புப் புள்ளிகளுடனும் உடம்பில் திட்டுத் திட்டான கரும்புள்ளிகளும் இருக்கும்.
  • முதிர்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். முன்இறக்கைகள் கருப்பு நிறப்பின்னியில் மஞ்சள் நிற குறுக்குக் கோடுகள் இருக்கும். பின்இறக்கைகள் வெண்மை நிறத்துடன் ஓரங்களில் பழுப்பு நிற பட்டையுடன் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வயலை உழுது மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கவேண்டும்
  • வயல் வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிடவும்.
  • ஹெக்டேருக்கு 15 இனக்கவர்ச்சிப்பொறி வைத்து ஆண் அந்துப் புச்சிகளை கவர்ந்து அழிக்கவும்
  • முட்டை குவியல்கள், புழு கூட்டங்களை கையால் சேகரித்து அழிக்கவும்
  • மாலை நேரங்களில் புரோடீனியா என்.பி.வைரஸ் 1.5x1012 புழு சமன் அளவு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும் அல்லது
  • கீழ் காணும் ஒரு பூச்சிகொல்லி மருந்தினை தெளிக்கவும்
பூச்சிகொல்லி அளவு
இமாமெக்டின் பென்சோவேட் 5 % SG 4 மி / 10 லி
ப்ளுபென்டையமைடு 20 WDG 6.0 கி /10 லி
இடாக்ஸ்சோகார்ப் 14.5 % SC 6.5 மி / 10 லி
நோவல்லுரான் 10 % EC 7.5 மி / 10 லி
ஸ்பினோசேடு 45 % SC 3.2 மி / 10 லி
தையோடைகார்ப் 2.0 கி / லி
புழு
கூட்டு புழு அந்துப்பூச்சி
அறிகுறி

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016