பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மஞ்சள் முரனைச் சிலந்தி : பாலிஃபேகோடார்சோநீமஸ் லேட்டன்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் கீழ்நோக்கி சுருங்கி சுருண்டுவிடும்
  • இலைக்காம்புகள் நீண்டுவிடும்
  • செடியின் வளர்ச்சி குன்றிவிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: நீள்வட்ட வடிவில் வெள்ளை நிறத்துடன் இருக்கும்
  • இளம்குஞ்சு: வெண்ணிறத்தில் இருக்கும்
  • பூச்சி: சற்று பெரியதாக நீள்வட்ட வடிவில், மஞ்சள் நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வயலில் இறை விழுங்கும் சிலந்தியான அம்ளிசியஸ் ஒவலிஸ்ன் நடமாட்டத்தை அதிகப்படுத்தவும்
  • போரேட் 10% @10 கி.கி/எக்கடர் என்ற அளவில் தெளிக்கவும்
இலைகள் கீழ்நோக்கி சுருங்குதல்
முதிர்பூச்சி 

பூச்சிகொல்லி அளவு
ப்ரோபைசின் 25 % SC 8.0 மி /10 லி
க்ளோர்பெனாபயர் 10 % SC 1.5 மி / லி
டையபென்தையுரான் 50 % WP 8.0 கி / 10 லி
டைமிதோயேட் 30 % EC 1.0 மி / லி
எத்தியான் 50 % EC 2.0 மி / லி
ஃபினாசக்யுன் 10 % EC 2.0 மி / லி
பென்பைராக்ஸிமேட் 5 % EC 1.0 மி / லி
கேக்சிதையாஜோக்ஸ் 5.45 % EC 8.0 கி / 10 லி
மில்பமெக்டின் 1 % EC 6.5 கி / 10 லி
ஆக்ஸிடெமடான் – மீதைல் 25% EC 2.0 மி / லி
போசலோன் 35 % EC 1.3 மி / லி
ப்ரோபர்கைட் 57 % EC 2.5 மி / லி
குயின்னால்பாஸ் 25 % EC 1.5 மி / லி
ஸ்பைரோமெஸிபென் 22.9 % SC 5.0 கி / 10 லி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016