அந்தரக்நோஸ்: கொல்லிட்டோடிரைக்கம்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- சிவப்பு நிறமாக உள்ள பழுத்த பழங்கள் பாதிக்கப்படுகின்றன
- சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் பழத் தோலில் தோன்றுகிறது
- மோசமாக நோயுற்ற பழங்கள் வைக்கோல் நிறம் அல்லது வெளிர் வெள்ளை நிறமாக மாறி காரமூட்டும் தன்மைய இழக்கிறது
- நோயுற்ற பழங்களை வெட்டினால் விதை, துரு நிறத்தில் பூஞ்சான மூலம் பாய்போல் மூடப்பட்டிருக்கும்.
|
|
|
|
|
கருப்பு வட்ட புள்ளி |
வைக்கோல் நிற மிளகாய் |
வெள்ளை நிற மிளகாய் |
அழுகிய மிளகாய் |
|
நோய் காரணி:
- மைசிலியம்- குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு இருக்கும்
- தண்டில் உள்ள அசெர்விலை மற்றும் ஸ்ட்ரோமா அரைக்கோள வடிவில் இருக்கும்
- கொணிடியா- இளஞ்சிவப்பு நிறத்தில் கூட்டமாக இருக்கும்
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- விதைகள் மூலம்
- வான்வழி கொணிடியா மற்றும் மழை மூலம்
- ஈக்கள் மற்றும் மற்ற பூச்சிகள்- ஒரு பழத்தில் இருந்து மற்றொரு பழத்திருக்கு உயிர் நுண்மங்கள் மூலம் பரப்புகிறது
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- வெப்பநிலை- 28°C, ஈரப்பதம்- 95%
- பழங்கள் பழுக்க தொடங்கியதும், மழை ஏற்படும் போதும் உயர் ஈரப்பதமான நிலைமைகள் ஏற்பட்டால் நோய் தோன்றும்
|
கட்டுப்படுத்தும் முறை:
- நோயற்ற விதைகளை பயன்படுத்தவும்
- விதை நேர்த்தி- திறம் 2 கிலோ / எக்டர் அல்லது ஜைநேப 2.5 கிலோ / எக்டர்
- 0.2 % கேப்டன் மூன்று தெளிப்புகள்- முதல் தெளித்தல் பூக்கும் முன், இரண்டாவது தெளித்தல் பழம் உருவாகும் பொது மற்றும் மூன்றாவது தெளித்தல் இரண்டாவது தெளித்தலுக்கு பிறகு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்கவும்
உயிர்மக் கட்டுப்பாடு:
- சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ் (ராஜவேல், 2000)
- சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் மற்றும் ட்ரைகொடரமாவிரிடே (முத்துராஜ், 1998)
- செகாரோமைசிஸ் சர்விசியே மற்றும் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் (ஜெயலட்சுமி, 1998)
- அத்தியாவசிய எண்ணெய்- நைஜிலியாசடைவா- நுண்ணுயிர் கொல்லி
|
Source of Images:
http://agropedia.iitk.ac.in/sites/default/files/uas%20raichur/cotton%20bollworm/water%20soaked%20lesion%20on%20fruits.jpg
http://www.chileplanet.eu/diseases.html
http://www.apsnet.org/publications/imageresources/Pages/IW000078.aspx
http://uasr.agropedias.in/content/chilli-anthracnose |