தாக்குதலின் அறிகுறிகள்:
- பழுப்பு நிறப் புள்ளிகள் மண் அருகே அல்லது வித்திலைகளில் தோன்றும்.
- இலைகள் மீது நீர் நனைத்த புண்கள் தோன்றும் மற்றும் தண்டுகள் கருப்பாகி சரிந்து விடும்
- நீர் நனைத்த புள்ளிகள் பெரிய மஞ்சள்-பச்சை அல்லது சாம்பல்-பழுப்பு புண்களாய் விரிவாகி மென்மையாக பஞ்சுபோன்று இருக்கும்
- வெல்வெட் போன்ற பூஞ்சை மற்றும் வித்திகள் சிதைவின் மேற்பரப்பில் குளிர் மற்றும் ஈரப்பதமான நிலைமைகளில் தோன்றும்
நோய் காரணி:
- போட்ரிடிஸ் சினேரியா - சாம்பல் நிற மரக்கிளை போன்ற கொநிடியோஸ்போர்களில் ஏராளமான கண்ணாடி போன்ற கொணிடியாக்கள் தோன்றும்.
- குளிர்காலத்தில் ச்க்ளிரோசியா அல்லது வசந்த காலத்தில் மைசிலியாக்கல் மூலம் இந்நோய் தோன்றும்.
- காற்று மற்றும் மழை நீர் மூலம் கொணிடியாக்கள் பரவுகிறது
நோய் தோன்றும் சூழ்நிலைகள் மற்றும் பரவல்:
- குளிர் மற்றும் ஈரமான வானிலையில் பூஞ்சைகள் தோன்றும்
- வெப்பநிலை 17–23°C, ஈரப்பதம்- 90%
- அளவுக்கதிகமான நைட்ரஜன் பயன்பாடு
- இரவில் இலை ஈரப்பதம், அடர்த்தியான பயிர் வளர்ப்பு மூலம் ஏற்படும். இதனால் நோய் கடுமை அடையும்.
|
|
|
சாம்பல் பூசணம |
|
|