பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழ அழுகல் மற்றும் நுனி கருகல், கொல்லட்டோடிரைக்கம் கேம்ஸிசி
அறிகுறிகள்

  • இந்நோய் தாக்கிய செடியின் நுனிகள் கருகி விடும்.
  • பழங்கள் அழுகிவிடுகின்றன.
  • நாற்று நட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு நுனிக் கருகல் அறிகுறிகள் தோன்றும்.
  • நோயுற்ற செடியில் கிளைநுனி, தளிர் இலைகள் கருகிக் காய்ந்து காணப்படும்.
  • நோய் தீவிரமாகும் பொழுது நுனியிலிருந்து நோய் கீழ் நோக்கிப் பரவும் பூக்கள் அதிக அளவில் உதிர்ந்து விடுகின்றன.
  • நோயினால் பாதிக்கப்பட்ட அதிக அளவில் உதிர்ந்து விடுகின்றன.
  • நோயினால் பாதிக்கப்பட்ட சிம்பு அல்லது கிளைகளில் கறுப்புப் புள்ளிகள் தோன்றும். அவை யாவும் பூசணத்தின் வித்துத் திரள்களேயாகும். இவற்றிலிருந்து எண்ணற்ற பூசண வித்துக்கள் உற்பத்தியாகின்றன.
  • இவை காற்றின் மூலம் பரவுகின்றன.
  • இந்நோய் பழங்களையும் தாக்கி சேதம் உண்டாக்குகிறது.
  • நோய் தாக்கிய பழங்களில் முதலில் சிறிய பழுப்பு நிறப் பகுதிகள் தென்படும்.
  • நாளடைவில் நோய் முதிர்ச்சியடையும் பொழுது இப்பகுதிகள் பெரிதாகிப் பழத்தின் பெரும் பகுதிக்கு பரவுகிறது.
  • பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பழங்களில் சிறு சிறு கறுப்பு நிறப் புள்ளிகளைக் காணலாம்.
  • மகசூலில் குறைவு ஏற்படுகின்றது. வற்றலும் தரம் குறைந்து விடுகின்றது.

பரவுதல்

  • பூசணம் நோய் தாக்கி எஞ்சிய தாவரப் பகுதிகளில் காணப்படுகிறது. இரண்டாம் நிலை தொற்று காற்றின் மூலமாக எடுத்துச் செல்லப்படும்.
  • தூள் வித்துக்கள் மூலம் பரவுகிறது.
  • நோயினால் பாதிக்கப்பட்ட பழங்களிலுள்ள விதைகள் மூலமாகவும் பூசணம் பரவுகிறது.

கட்டுப்பாடு

  • நோயில்லாத பழங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
  • நாற்று நட்ட 40வது நாளிலிருந்து ஏக்கருக்கு 1 கிலோ மேன்கோசெப் அல்லது சினெப் அல்லது 1.25 கிலோ தாமிர ஆக்சி குளோரைடு மருந்தை 20 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016