வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸில் போரம் க்ரைசாந்தமி
சேதத்தின் அறிகுறி:
- ஆரம்ப காலத்தில் சேதத்தின் அறிகுறியானது மஞ்சள் நிறத்திலும் மற்றும் பழுப்பு நிறங்களில் இலைகள் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் செடியின் அடிப் பகுதியிலிருந்து சாக ஆரம்பிக்கும்
- பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றியும் பூக்கும் திறனை இழந்தும் காணப்படும்.
- வாடல் நோய் வேர் அல்லது தண்டுப்பகுதியை அழுகச்செய்யும்.
|
|
|
பழுப்பு நிற இலைகள் |
வளர்ச்சி குன்றிய செடி |
பாதிக்கப்பட்ட தண்டு |
கட்டுப்படுத்தும் முறை:
- செடி குச்சிகளை நடுவதற்கு முன்பு வேர் விட குச்சிகளை சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸை திரம் 2 கி / லி தண்ணீர் அளவில் நனைத்து எடுக்க வேண்டும்.
- வாடல் நோய் செடி குச்சிகளின் மூலமாக பரவுகிறது, நோய்கள் தாவரத்தண்டு துண்டின் மூலமாக பரவுவதால் நோய்களற்ற விதைப்பொருட்களை உபயோகிக்கவும்.
- நிலப்பராமரிப்பு, குறிப்பிட்ட காலக் கண்காணிப்பு, பயிர் சுழற்சி மற்றும் பாதிக்கப்பட்ட செடிகளை நீக்குதல் போன்றவற்றின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
Image Source: http://www.greenhouse.cornell.edu/pests/gallery/index.htm, https://negreenhouseupdate.info/photos/chrysanthemum-fusarium-wilt |