பட்டை வண்ணத்துப்பூச்சி: கைலாசா கிளைட்டியா
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளை கடித்துச் சேதப்படுத்தும்.
- கடும் தாக்குதலின் போது இலைகளின் மத்திய நரம்புப் பகுதி மட்டும் இருக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை : வெளிர் மஞ்சள் நிறம்
- புழு : வளர்ந்த புழுக்கள் நிழலில் பார்க்கும் பொழுது பக்கவாட்டில் மஞ்சளாக இருக்கும். புழுக்கள் கருநிறமாக வெண்டு திட்டுக்களுடன் இருக்கும்.
- பூச்சி : வண்ணத்துப்பூச்சி வெல்வெட் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இறக்கைகளில் வெண்புள்ளிகளும், மஞ்சள் மற்றும் வெண்ணிறக் கோடுகளும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- குவினால்ஃபாஸ் 0.05 சதவிகிதம் தெளிக்கலாம்.
|
|