பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

எலுமிச்சை அசுவினி:

கருப்பு அசுவினி : டாக்ஸ்டோப்டிரா சூரன்டி
பழுப்பு அசுவினி : டாக்ஸ்டோப்டிரா சிட்ரிஸிடா

தாக்குதலின் அறிகுறிகள்:

  •  இளம் இலைகள் மற்றும் பூக்களை உண்ணும்
  • டிரைஸ்டிசா நச்சுயிரி நோயை பரப்பும்
  • இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சும்
  • செடிகள் வாடும், பூக்கள் வாடி தொங்கும்
  • தாக்கப்பட்ட இலைகள் கிண்ண வடிவில், சுருக்கங்களுடன் காணப்படும்
  • செடிகளின் வளர்ச்சி தடைப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • மஞ்சள் ஒட்டுப் பொறியை பயன்படுத்துதல்
  • மீத்தைல் டெமட்டான் (மெட்டாஸிஸ்டாக்ஸ்) (அ) டைமெத்தோயேட் (ரோகர்) 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
  • காக்ஸிநெல்லிட் வண்டுகள், ஸிரிபிட் ஈக்களை பயன்படுத்துதல்

 

இலைகள் சுருக்கமடைதல்
பூச்சிகள் இறக்கைகள் இல்லாமல் (அபேடிரே)
பூச்சிகள் இறக்கைகளுடன் (அலேடே)

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015