பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

எலுமிச்சை கருப்பு ஈ: அலிரோகேன்தஸ் வோக்லுமி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகளில் உள்ள சாற்றை உறுஞ்சுகிறது
  • இலைகள் சுருண்டிருக்கும்
  • இலை முதிர்வுக்கு முன்னதாகவே உதிர்ந்து விடுகிறது.
  • அடர்ந்த அச்சு பூஞ்சையால் தேன் போன்ற திரவம் வளர்ச்சியடைகிறது.
  • இலையின் நிறம் கருப்பாக மாறிவிடும் மற்றும் இலைகள் ஒளிச்சேர்க்கை நடவடிக்கை பாதிக்கிறது
  • பாதிக்கப்பட்ட மரங்களின் - சில பூக்களிலிருந்து சுவையற்ற  பழங்கள் உருவாகலாம்

பூச்சியின் விபரம்:

  • இளம் பூச்சிகள்: தட்டையான வடிவம் மற்றும் அளவில் முட்டை போன்ற தோற்றத்தில் காணப்படும்
  • பூச்சிகள்: சிறிய பூச்சி, உடலில் சாம்பல் தூசி கொண்டு மென்மையான கருப்பு நிறத்தில் காணப்படும். இறக்கையானது வயிறு நுனி கடந்து இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட மரத்தின் பகுதிகள், புழுக்கள்  ம்ற்றும் பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும்
  • ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி குளோர்பைரிபாஸ் சேர்த்து தெளிக்க  வேண்டும்
  • மரத்தின் அனைத்து கிளைகளிலும் திரவம் கொண்டு நனைக்க வேண்டும்
  • ஒட்டுண்ணிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்., என்கர்சியா SP , எரிட்மோசிரியஸ்சிரியஸ் மற்றும் கிளைசோபெர்லா  SP
இலையில் கருப்பு ஈக்கள்  
கருப்பு ஈக்கள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015