எலுமிச்சை சாறு உறிஞ்சும் குதிக்கும் அசுவினி: டைபோரினா சிட்ரி
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் செடியின் சாற்றை உறிஞ்சும்
- இளம் பூச்சிகள் அதிக அழிவைத் தரும். நுனியில் உள்ள கிளைகளில், மொட்டுக்கள், இளம் இலைகளில் கூட்டமாக இருக்கும்
- தேன் சுரப்பு வெளிவருவதால், கரும் பூசண வளர்ச்சியுடன் காணப்படும்
- தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து, பின் மடியும்
- பச்சையாதல் நச்சுயிரி நோயை கடத்தும் காரணியாக உள்ளது
பூச்சியின் விபரம்:
- இளம் பூச்சிகள்: தட்டையாக, முட்டை வடிவத்தில், ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
- பூச்சிகள்: சிறியதாக, பழுப்பு நிறத்தில், பழுப்பு நிற வளையம் முன்னிறக்கையில் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
- செடி நன்றாக வளரும் நிலையில் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்
- மாலத்தியான் 0.05% (அ) கார்பைரில் 0.1% தெளித்தல்
- இயற்கை எதிரிகளான ஸிர்பிட்ஸ், க்ரைசோபிட்ஸின் நடமாட்டத்தை ஊக்குவித்தல்.
|
|
|
சாறு உறிஞ்சும் குதிக்கும் அசுவினியால் தாக்கப்பட்ட இலைகள் |
இலைகளில் கரும் பூசண வளர்ச்சி |
|