பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
மாவுப்பூச்சி: ப்ளானோகாக்ஸ் சிட்ரி
தாக்குதலின்அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள், முதிர்ந்த பூச்சிகள் மரத்தின் கிளை மற்றும் பழங்களின் சற்றை உறுஞ்சுகிறது
- வெளுத்த நிறத்தில் மாறிவிடும்
- பாதிக்கபட்ட மரத்தின் பகுதியானது காய்ந்துவிடும்.
- அடர்ந்த அச்சு பூஞ்சையால் அதிகளவு தேன் போன்ற திரவம் வளர்ச்சியடைகிறது
- பூஞ்சையானது தழை மற்றும் பழங்களை சூழ்ந்திருக்கும்
- பாதிக்கப்பட்ட பூக்களானது பழங்களை உருவாக்குவதில்லை
பூச்சியின்விபரம்:
- முட்டை: முட்டையானது கூட்டாக பஞ்சு போன்ற இழையால் மூடபட்டிருக்கும்
- இளம்பூச்சிகள்: நிமினை நிறத்தில் வெண்மை நிற மெழுகு பூசப்பட்ட இழையுடன் கூடியது.
- பூச்சிகள்: ஆண் பூச்சியானது இறக்கையுடன் கூடிய, நீள உணர்கொம்புகள் கொண்ட வாய் பகுதி அற்று காணப்படும், பெண் பூச்சியானது இறக்கை அற்ற , நேரான உடல் கொண்ட சிறிய, மெழுகு இழையுடன் கூடிய கோடு காணப்படும்.
|
|
|
பழங்களின் மீது மாவுப்பூச்சிகளின் முட்டை கூட்டம் |
பெண் பூச்சி மற்றும் இளம் பூச்சிகள் |
|
கட்டுப்படுத்தும் முறை:
- பாதிக்கப்பட்ட கிளை, தண்டு மற்றும் இலை பகுதியை அழிக்க வேண்டும்.
- பட்டை நீக்கப்பட்ட கிளைகளில் மெத்தைல் பாராதியான் பசையை பூச வேண்டும்
- பழத்தை தாங்கியிருக்கும் தண்டின் மேல் ஒட்டும் பொறியை(5 செ.மீ நீளம்) பயன்படுத்த வேண்டும்.
- 25கி/லி மீன் எண்ணெய் ரோசின் சோப்புடன் 0.2% டைகுளோர்வாஸ் சேர்த்து தெளிக்க வேண்டும்.
- க்ளோரோபைரிபோஸ் கொண்டு மண் நேர்த்தி செய்ய வேண்டும்.
மரத்திற்கு அசிபேட், மெத்தொனைல், அல்லது க்ளோரோபைரிபோஸ் தெளிக்க வேண்டும்.
- ஒரு மரத்திற்கு 10 ஆஸ்திரேலியன், கிரிப்டோலீமஸ் மாண்ட்ரோசியரி எனும் இரைவிழுங்கி வண்டுகளை மரத்திற்கு வீதம்விடலாம் .
|
|