பழச்சாறு உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சி: ஒக்ரிஸ் புல்லொனிக்கா, ஓ.மெட்டர்னா
தாக்குதலின் அறிகுறிகள்:
- இரவு நேரங்களில் அந்துப்பூச்சிகள் ஊசி போன்ற வாய்க் குழலால் பழங்களைக் குத்திச் சாற்றை உறிஞ்சுவதால் பழங்கள் அழுகி நாளடைவில் உதிர்ந்துவிடும்.
பூச்சியின் விபரம்:
- புழு: அதன் உடல் பகுதியில் மஞ்சள், நீல, ஆரஞ்சு நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.
- பூச்சிக்கள்: தடித்த வாய் பகுதி மற்றும் ஆரஞ்சு நிற இறக்கையுடையது.
- ஒதரிஸ் மெட்டர்னா: இறக்கையில் 3 கரு நிற புள்ளிகளுடன் கொண்டிருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- களை ஓம்புயிரிகளான டினோஸ்போரா கார்டிஃபொலியா, கக்குலெஸ் பெண்டுலெஸ் அழிக்க வேண்டும்.
- பொறி அல்லது உணவு கவர்ச்சி பொருள் கொண்டு பூச்சிகளை கவரலாம்
- புகை போட்டு முதிர்ந்த பூச்சிகளாய் தடுக்களாம்
- பாலிதீன் பை கொண்டு பழங்களை பையிட வேண்டும்
- பயிர் பொறி - தக்காளி வளர்த்து பூச்சிகளை கவரலாம்
- நச்சு உணவு
- மாலத்தியான் 0.05% மற்றும் நொதித்த மொலாசஸ் (50 1மிலி/லிட்டர்)
|
|
|
|
தாக்கப்பட்ட பழம் |
பெண் பூச்சி |
ஆண் பூச்சி |
|