பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பஞ்சு செதில் பூச்சி: ஐசிரியா பர்கேசி



தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • தேன் சுரப்பு வடிதல்
  • கரும்பூசண வளர்ச்சி தோன்றுதல்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வெள்ளையாக வரி போன்ற கூட்டமாக 800 முட்டைகளுடன் காணப்படும்
  • இளம் பூச்சிகள்: சிவப்பு நிற உடலுடன் கருப்பு நிற கால்களுடன் காணப்படும்
  • பூச்சி: பூச்சிகளின் மேல்வெள்ளை நிற ரோமங்களால் சூழ்ந்திருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பனிக்காலத்திற்கு பின், வசந்த காலத்திற்கு முன் மணமற்ற எண்ணெணை தெளிக்க வேண்டும்
  • தோட்டபயிர் எண்ணெணை, தேவைப்பட்டால் தெளிக்கலாம்
  • உரகம்போஸ்ட் தேயிலை, கரும்பு ஆலை கழிவுகள், எலுமிச்சை எண்ணெய் கலவையை அளிக்கலாம்
  • பூண்டு-மிளகு தேநீரையும் தெளிக்கலாம்
  • இயற்கை இரை விழுங்கிகளை தோட்டங்களில் விடலாம்
  • எறும்புகளை கட்டுபடுத்து பூச்சி மருந்தை தூவ வேண்டும்
  • வெடேலியா மற்றும் ஆஸ்திரேலியன் பூச்சிகளை தோட்டங்களில் வெளிவிடலாம்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015