பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலை துளைப்பான்: பில்லோக்னிஸ்டிக் சிட்ரில்லா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுவானது இளம் இலையை தாக்கி அதன் வெளித்தோலை உண்கிறது
  • இலையின் கீழ் பகுதியில் வெள்ளி நிற தோற்றத்தை உருவாக்குகிறது
  • இலையானது உருசிதைந்த , சுருங்கி  காணப்படும்
  • இதன் தாக்கத்தினால் இலை உதிர்வு ஏற்படுகிறது
  • சிட்ரஸ் கேங்கர் நோயை ஊக்குவிக்கிறது

பூச்சியின் விபரம்:

  • முட்டை: சிறியது, கீழ் பக்கத்தில் தட்டையான அமைப்பை உடையது
  • புழு: மிகச்சிறியதாக கால்கள் இன்றி இலையின் மேற்புறத்தில் உள்ள மெல்லிய தோலுக்கும் கீழே காணப்படும்.
  • தாய்ப்பூச்சி: சிறியதாக முன் இறக்கைகளின் நுனியில் ஒவ்வொன்றிலும் ஒரு கரும்புள்ளியுடன் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பென்வாலரெட் 0.2 மிலி அல்லது டைமீத்தேட் (ரோகர்) 2மிலி/லிட்டர் தெளிக்க வேண்டும்.
  • வேப்பம் பிண்ணாக்கு நீர் (அ) வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் (50 மிலி / 1 லி) நீர் கலவை தெளிக்கலாம்.

 

இலைத் துளைக்கும் புழு சுருக்கமடைந்த இலைகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015