பிசின் வடிதல் நோய் – பைட்டோப்தோரா பேராசிடிகா, பி.பள்மிவோரா, பி. சைட்ரோதோரா
அறிகுறிகள்:
- முதல் அறிகுறியாக மரப்பட்டையில் கரும் கறையாக தோன்றி பின்பு மரக்கட்டை வரை இந்நோய் பரவும்
- மரப்பட்டையின் அடிப்புறத்தில் இந்நோய் பரவி கம்பி வளையம் போல் தோன்றி மரத்தையே அழித்துவிடும்
- மரப்பட்டைகளின் சில பகுதிகள் வரண்டும், சுருங்கி, வெடித்தும் மற்றும் சிறு சிறு துண்டுகளாக காணப்படும்.பின்பு இதன் விளைவுகள் அதிகரித்து, தண்டு பகுதியில் உள்ள மரப்பட்டையிலிருந்து பிசின் வடிவதை காணலாம்
- இதன் பாதிப்பு வேரின் நுனி வரை பரவும்
- வெள்ள நீர் பாசனமும் மற்றும் நீர் தேங்கி இருப்பதால், இதன் தண்டு பகுதிகள் நோய் பாதிப்படைய வாய்ப்புள்ளது
- பூசண வித்துக்கள் மண்ணில் உயிர் வாழும் இவை பாசன நீராலும், காற்று மூலமாகவும் மற்றும் மழை நீரினாலும் நோய் பரவக் கூடும்
கட்டுப்பாடு:
- பயிர் சாகுபடியின் நோய் தாக்காதவாறு நுனி வேர்கள் அல்லது அடி தண்டைத் தீங்கு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்
- நோயினால் பாதிக்கப்பட்ட மரப்பட்டையை ½ “ அளவில் அடியோடு அகற்றிவிட வேண்டும்
- தண்டு பகுதியில் உள்ள மரப்பட்டையை போர்டியாக்ஸ் பசையினை தடவ வேண்டும்
|
|