பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்கள்

சொறி நோய்: ஸ்சண்தோமோனஸ் கேம்பஸ்ட்ரைஸ் பிவி சிட்ரை

அறிகுறிகள்

  • சொறி நோயினை ஏற்படுத்தும் பேக்டீரியா இலைத்துளைகள் (Stomata) மூலமாகவோ பூச்சி மற்றும் காற்றில் அசையும் முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ ஊண் ஊட்டும் தாவரத்திற்குள் (Host) நுழைகிறது.
  • இவை இலையின் உயிரணுக்களுக்கிடையேயுள்ள இடங்களில் (Intercellular Spaces) இனப்பெருக்கமடைந்து திசுவறையிலுள்ள நடுச்சுவர் (Middle Landla) பகுதியை அழித்து விடுகின்றன.
  • இவை இலையின் புறணிப் பகுதியில் நிலையாகின்றன. இவ்விடத்தில் சொறி போன்ற வளர்ச்சி ஏற்பட்டு பேக்டீரியா அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • இந்நோய் 20 முதல் 350 சென்டிகிரேடு வெப்ப அளவில் நல்ல மழையுள்ள காலங்களில் அதிமாகக் காணப்படுகிறது. நோய் உண்டாவதற்கு இலைகளில் குறைந்தது 20 நிமிடங்களுக்கு ஈரம் இருக்க வேண்டும்.
  • நோயுற்ற இலையில் பேக்டீரியா 6 மாத காலத்திற்கு அழியாமல் இருக்கின்றது. பேக்டீரியா நோயுற்ற சிறுக் குச்சிகளில் அதிக நாட்கள் அழியாமல் தங்கியிருந்து நோய் உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றது.
  • நோய் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள், காற்று, இலைத் துளைக்கும் பூச்சிகள் (Leaf Miners) முதலியன மூலமாகப் பரவுகிறது. நோயுற்ற கன்றுகளை நடப் பயன்படத்துவதாலும் நோய் எளிதில் பரவுகின்றது.

 

 

கட்டுப்பாடு

  • நோயுற்று கீழே விழுந்து கிடக்கும் இலைகள் மற்றும் சிறுக் குச்சிகள் முதலியவற்றை சேகரித்து எரித்துவிட வேண்டும்.
  • நோயில்லாத மரத்திலிருந்தே கன்றுகள் தயார் செய்ய பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு முன்பு கன்றுகள் உள்ள இடத்தில் இலைகள் நன்றாக நனையுமாறு 1 சத போர்டேரக் கலவை மருந்தை தெளிக்க வேண்டும்.
  • பழத்தோட்டங்களில் நோயுற்ற மரங்களில் நோயுற்ற சிறுக் குச்சிகளை வெட்டிய பின்பு 1 சதப் போர்டோக் கலவையை அல்லது 0.25% தாமிர ஆக்சிக் குளோரைடு மருந்தை தெளிக்க வேண்டும். மரம் துளர்விடும் ஒவ்வொரு சமயமும் மரத்தின் பகுதிகள் அனைத்தும் நன்றாக நனையுமாறு மருந்து தெளித்தல் மிகவும் அவசியமாகிறது.
  • மரங்களைச் செழிப்பான தன்மையுடன் வைத்திருக்க நன்கு உரமிட்டு முறையாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • எலுமிச்சையில் தோன்றும் இலைத் துளைப்பான்கள் இந்நோயைப் பரப்புவதால் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • இச்சொறி நோயைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் (Streptomycin Sulphate) 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்களுக்குக்கொரு முறை தெளிக்க வேண்டும்.
  • தேவையான அளவு மருந்துக் கலவையை மேற்கூறிய விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு தாமிர ஆக்சிக்குளோரைடு 0.25% கரைசலையும் பயன்படத்தலாம்.
  • வேப்பம்புண்ணாக்கு ஏக்கருக்கு 73 கிலோ 290 லிட்டர் தண்ணீரில் ஒரு வாரம் ஊறவைத்துக் கரைத்த கரைசலைத் தெளித்து இந்நோயினையும், நோயைப் பரப்பும் இலைத் துளைப்பான்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • நார்த்தையில் நேபாளி ஒப்ளாங் (Nepali Oblong) மற்றும் நேபாளி உருண்டை (Nepali Round) போன்ற ரகங்கள் இந்நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015