தண்டு நலிவு நோய் / விரைவு நலிவு நோய்: டிரைடிசா நச்சுயிரி
அறிகுறிகள்:
- எழுமிச்சை நாற்றுகள் எளிதில் நோய் தாக்கக்கூடியவை
- ஆனால் இனிப்பு ஆரஞ்சு வகை மற்றும் நாற்றுகள் அல்லது எழுமிச்சை, டிரைபோலியேட் ஆரஞ்சு, சிட்ரேன்சு, ரங்பூர் எழுமிச்சை வேர்கள் அதிகளவில் பாதிக்காது. புளிப்பான வேர் கொண்ட திராட்சை பழம் மற்றும் ஆரஞ்சு பாதிக்கக்கூடும்
- இனிப்பு ஆரஞ்சு பழங்களின் வேர்ப்பகுதிகள் எளிதில் பாதிக்கப்படும் மற்றும் இலைகளில் நோயின் அறிகுறிகள் காணப்படும்
- வேர்ப்பகுதி அழுகி, கிளைகள் அழிந்துவிடும். பழங்கள் குறைந்து செடி மட்டும் எலும்புக் கூடுப் பபோல் காணப்படும்
- புளிப்பான ஆரஞ்சின் மரப்பட்டையின் பகுதி காய்ந்துக் காணப்படும்
- திராட்சை பழங்கள் மற்றும் எலுமிச்சைகளின் வேர் பகுதிகள் எளிதில் பாதிக்கக்கூடும்
- எலுமிச்சை இலைகளில் அதிகளவில் நரம்பு புள்ளி போன்று காணப்படும்
- மரத்தின் வளர்ச்சி குறைந்து விடும் மற்றும் பழ சாகுபடி குறைந்துவிடும் பழங்கள் சிறிதளவில் காணப்படும்
- மரப்பட்டையில் பாதிக்கப்பட்ட மொட்டுகள் மற்றும் டாக்சோப்டேரா சிட்ரைசிடா (அசுவினிப் பூச்சி) ஆகியவையால் பாதிக்கப்பட்டவைகளை உபயோகிக்கக் கூடாது
கட்டுப்பாடு:
- இனிப்பு வகை ஆரஞ்சு மற்றும் கிச்சிலிப்பழ வகை ஆகிய பழங்களின் பாதிக்கப்பட்ட வேர் பகுதிகளை அகற்றி விட வேண்டும்
- ட்ரிடிஸ்சா நச்சுயிரி செலுத்தப்பட்ட எழுமிச்சை நாற்றுகளை பயன்படுத்தவும்
|
|