செதில் பூச்சிகள்: சாய்செட்டியா நைக்ரா,மைசிடேஸ்பிஸ் பர்சோனேட்டா
சேதத்தின் அறிகுறிகள்:
- இளம் தளிர், தண்டு மற்றும் கிளைகளை தாக்கும்.
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறி உதிர்ந்து விடும்.
- கரும்புகை பூசாணம் உருவாக பூச்சியிலிருந்து வெளிவரும் தேன் போன்ற திரவம் உதவுகிறது.
பூச்சியின் விபரம்:
சாய்செட்டியா நைக்ரா
- பளபளப்பான கருப்பான உருண்டையான பூச்சி.
மைசிட்டேஸ்பிஸ் பாசோனேட்டா
- சாம்பல் கலந்த பழுப்பு நிற உருண்டையான பூச்சி.
லிக்கேனியம் வகைகள்
- தட்டையான, பச்சையற்ற மிருதுவான பூச்சி, உடலின் மேற்பகுதி உயர்ந்து குவிந்து காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தாக்கப்பட்ட இலைகள் மற்றும் கிளைகளை அகற்றவேண்டும்.
- டைமீத்தோயேட் 1 மிலி / லிட்டர் அல்லது மோனோகுரோட்டோஃபாஸ் 1.5 மிலி / லிட்டர் தெளிக்கலாம்.
|
|