இலைப்பேன்: சிர்ட்டோதிரிப்ஸ் டார்சாலிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட இலைகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
- இலைகளில் வெண்ணிறப் புள்ளிகளை உண்டாக்கும்.
- பூக்கள் உதிர்ந்து விடும்.
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சுகள்: மிகச்சிறிய, நீளமானது எளிதில் உடைகிற உடலினை உடையது.
- வைக்கோலின் மஞ்சள் நிறம் போன்று இருக்கும்.
- பூச்சி : மயிரிழைகளால் ஆன இறகுகளை உடையது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தாக்கப்பட்ட இலை மற்றும் கிளைகளை அகற்றவேண்டும்.
- டைமீத்தோயேட் அல்லது மீதைல் டிமேட்டான் 2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.
|
|