பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கோக்கோ : மாவுப்பூச்சி : (பிளானோகாக்கஸ் லில்லேஸைனஸ் பி.சிட்ரி, பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் மற்றும் ராஸ்ட்ரோகாக்கஸ் ஐசெர்யாய்ட்ஸ்)

  • மென்மையான பகுதிகளை அதிகமாக தாக்குகிறது
  • மாவுப் பூச்சியின் தாக்குதல், செரல்லி வாடல் நோயை தூண்டுகிறது.



மேலாண்மை :

  • குறைவான பூச்சித் தாக்குதலின் போது வேப்பெண்ணெய் 3% அல்லது மீன் எண்ணெய்  ரோசின் சோப் 25 கி/லிட்டர்.
  • அதிகமான தாக்குதலின் போது, கீழ்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை அடிக்கவும்.
  • டைமீத்தோயேட் (2 மிலி/லிட்டர்) புரோபென்னோபோஸ் (2 மிலி/லிட்டர்), குளோரோபைரிபோஸ் (5 மிலி/லிட்டர்), பியும்ரோபென்சின் (2 மிலி/லிட்டர்), இமிடாக்ளோப்ரைட் (0.6 மிலி/லிட்டர்), தையமீத்தாக்சோன் (0.6 மிலி/லிட்டர்)
  • பாராகாக்கஸ் மார்ஜினேட்டர் மட்டும் உள்ள இடங்களில், அசெரோபேகஸ் பப்பாயேயை கிராமத்துக்கு ஒட்டுண்ணியை வெளியிடவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016