தண்டு வெட்டும் வண்டு: ஸ்தினியாஸ் கிரிசேட்டர்
பெண் வண்டுகள் சேதத்தை ஏற்படுத்துகிறது. இவைகள் தண்டுகளை துளையிட்டு வெள்ளையான சுழல் போன்ற முட்டைகளை சாய்வாக இடுகிறது. இதனால் தண்டு உலர்ந்து காய்ந்துவிடும்.
மேலாண்மை :
- நிலக்கரி தார் + மண்ணெண்ணையை 1:2 என்கிற விகிதத்தில் அல்லது கார்பாரைல் 50 WP 20 கிராம்/லிட்டர் (தண்டின் அடித்தளப் பகுதியிலிருந்து 3 அடி உயரத்தில்) நன்றாக உரசி தேய்க்கவும் ( முட்டையிடுதளைத் தவிர்க்க).
- துளையினுள் உள்ள புழுவை அகற்றி பின் மோனோக்ரோட்டோபோஸ் 36 WSC 5-10 மிலி/துளை / துளை (அ) கார்போபியூரான் 3 G 5 கிராம் / துளை மற்றும் துளையை மண் வைத்து அடைக்கவும்.
- டைக்குளோரோவாஸ் (DDVP) + மோனோகுரோட்டோபோஸ் கரைசலைஊசி மூலம் இடவும். பின் களி மண் கொண்டு துளையை அடைக்கவும்.
|