தென்னை ஈரியோபிட் கரையான் : ஆசிரியா கர்ரோரோனிஸ்
|
அறிகுறிகள்:
- முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்
- காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்
- தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்
- உருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- இளம் பூச்சி மற்றும் பூச்சி: நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும்
|
|
|
|
இளம் காய்களில் (அ) குரும்பைகளில் சேதம் |
காய்களில் ஈரியோபிட் கரையானால் சேதம் |
|
|
கட்டுப்பாடு:
- யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, மூரேட்ஆப் பொட்டாஷ் 3.5 கிலோ/தென்னை மரம்/வருடம்
- வேப்பங்கட்டி 5 கிலோ மற்றும் அங்கக உரம் 5 கிலோ/தென்னை மரம்/ வருடம்
- போராக்ஸ் 50 கிராம் + ஜிப்சம் 1 கிலோ + மாங்கனீசு சல்பேட் 0.5 கிலோ /தென்னை மரம்/வருடம்
- ஊடுபயிராக சணப்பையை 4 பயிர்கள் /வருடத்திற்கு பயிரிடலாம். காற்றுத் தடுப்பு தாவரமாகி சவுக்கை தென்னந்தோப்பு சுற்றிலும் நடலாம்.
- ட்ரைஅசோபாஸ் 40 கிகி 5 மிலி /லிட்டர் (அ) (அ)கார்போசல்பான் 25 EC வேம்பு கரைசல் 1% 5மிலி/லிட்டர் கலந்து குறிப்பிட்ட இடத்தில் அளிக்க வேண்டும்.
வேர் ஊட்டம் :
- தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக வெளியீடான அக்ரோ பையோசைட் 30மிலி/மரம் என்ற அளவில் வேர் ஊட்டம் செய்ய வேண்டும்
- டிரைஅசோபாஸ் 40 கிகி 15 மிலி (அ) கார்டோப்யூரான் 25 கிகி 15 மிலி/15மிலி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
- வேர் ஊட்டம் செய்தவுடன், 45 நாட்கள் கழித்து அடுத்த அறுவடை செய்ய வேண்டும்
|
|
|
பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி
வேர் ஊட்டம் |
தென்னை டானிக் பயன்படுத்தி வேர் ஊட்டம் |
|