பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளைத் தண்டு துளைப்பான்: ஜைலோட்டிரிக்கஸ் குவாட்ரிப்பெஸ்
சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் தண்டுகளை துளைத்து வேர்கள் வரை செல்லும்
  • புழுக்களின் கழிவு பொருள் துளையினை மூடியிருக்கும்
  • புழுக்கள் தாக்கப்பட்ட மரங்களில் பட்டைகள் மீதுள்ள தேரல் பகுதி உயர்ந்து மேடாய் இருக்கும்
  • இலைகள் மஞ்சளாக மாறி வாடிவிடும்
  • புழுக்கள் தாக்கப்பட்ட இளஞ்செடிகள் (7 - 8வருடம்) ஒருவருடத்தில் அறந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • வண்டின் பழுப்புநிற இறக்கைகளின் குறுக்கே வெண்ணிறப் பட்டைகள் கோடுகள் காணப்படும்
  • ஆண் வண்டு பெண் வண்டைவிட சிறியது
  • ஆண்வண்டின் தலைப்பகுதியில் உயர்ந்த கருநிற தட்டுகள் தெளிவாக இருக்கும் ஆனால் பெண் வண்டில் தெரியாது

கட்டுப்படுத்தும் முறை:

  • நிழல் தரும் மரங்களை நடுதல் வேண்டும்
  • தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி செடிகளை பிடுங்கி எரித்து விடுதல் நல்லது
  • தனியாக இருக்கும் மரத்தின் மேற்பட்டைகளை உரித்து முட்டைகளை அகற்ற வேண்டும்
  • பட்டைகளில் இலேசான கோடுகள் கிழித்து விட வேண்டும்
  • பெவிரீயா பெசியானா என்னும் பூசணம் தெளிக்க வேண்டும்
Coffee Coffee
coffee
Coffee Coffee
ஆண் வண்டு பெண் வண்டு

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015