பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிவப்பு தண்டுத் துளைப்பான்: சுசீரா காஃபியே
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள், தண்டுகளையும், கிளைகளையும் துளைத்து சாப்பிடும்
  • செடி வாடி விடும்
  • புழுக்களின் கழிவுப்பொருள் துளைகளுக்கு வெளியே தொங்கியிருக்கும்
  • முற்றிய நிலையில் கிளைகள் காய்ந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • புழு: சிவப்பு நிறமாக கருந்தலையுடன் காணப்படும்
  • பூச்சி: அந்துப்பூச்சி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இறக்கையில் நீலநிறப்புள்ளிகளுடன் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தாக்கப்பட்ட செடிகள் மற்றும் கிளைகளை வெட்டி எரித்துவிட வேண்டும்
  • வெவீரியா பெசியானா எனும் பூசண வித்துகளை வயலில் தெளித்து பூச்சியை அழிக்கலாம்


Coffee Coffee

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015